2019ற் காண போட்டியைப் பற்றி

சூழமைவு

2016 செப்டெம்பரில் இருந்து மின்வலு மற்றும் மீள் புதுபிக்கத்தக்க சக்தி அமைச்சு சூரிய சக்திக்கான நாடளாவிய அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தினை அமுல்படுத்த ஆரம்பித்தது. இதற்கமைய தேசிய மின்சார வழங்குகைக்கு மேலதிகமாக 1000 மெகா வோல்டினை வழங்கக்கூடிய பத்து இலட்சம் குடும்பங்கள் 2025 ஆம் ஆண்டளவில் சூரியக் கலங்கள் பொருத்தப்பட்ட வீடுகளாக மாறும். சூரியக் கலங்களின் கொள்வனவிற்கான நிதி ஊக்குவிப்புக்களும் மேலதிக மின்சாரத்தினைப் பொது மின்சார வலையமைப்பினுள் செலுத்துவதற்கான கட்டணமும் தனிப்பட்ட வீடுகளில் பொருத்துகைகளை ஊக்குவிப்பதற்காக வழங்கப்படுகின்றன. தற்போதுள்ள அரசாங்க நிகழ்ச்சித் திட்டத்தில் மீள் புதுப்பிக்கத்தக்க சக்தியின் பயன்பாட்டினை மேம்படுத்தவும் சக்தியின் வினைத்திறனினை மேம்படுத்தவும் எல்லைகள் விஸ்தரிக்கப்பட்டுள்ளதை “சூரிய சக்திக்கான போராட்டம்” எனும் கருத்திட்டம் கோடிட்டுக்காட்டுகின்றது.

இவ்வகையான சக்தி இடைமாற்றமானது அதிகரித்த விழிப்புணர்வினையூம் பதிலீடு செய்யத்தக்க மாதிரிக் கருத்திட்டங்களையூம் தேவைப்படுத்துகின்றது. எனவே பசுமைச் சக்தி வெற்றியாளர் (Green Energy Champion) எனப்படுகின்ற முன்னெடுப்பானது இலங்கை மக்கள் தமது ஆக்கபூர்வமான எண்ணக்கருக்களைப் பகிர்ந்துகொள்வதற்கு அவர்களை ஊக்குவிக்கின்றது. பசுமைச் சக்தி வெற்றியாளர் இலங்கை போட்டியிலே தனிநபர்களும் குழுக்களும் அவர்களின் எண்ணக்கருக்களைச் செப்பனிடுகின்ற செயலமர்வின் பின்னரும் மேலதிக தொழில்நுட்ப உதவியின் பின்னரும் தமது முன்மொழிவுகளைச் சமர்பிப்பதற்காக ஒன்றுகூடுகின்றனர். மிகவும் சிறந்த எண்ணக்கருவிற்கு நிதியிடல் வழங்கப்படும் என்பதுடன் சமர்பிக்கப்பட்ட முன்மொழிவுகளை அமுல்படுத்துவதற்கு உதவியூம் வழங்கப்படும்.

பசுமைச் சக்தி வெற்றியாளர் இலங்கை மூன்றாவது தடவையாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. 2017 ஆம் ஆண்டு வெற்றிபெற்ற முன்மொழிவினை இலங்கை அபிவிருத்தி நிர்வாக நிறுவனம் சமர்பித்திருந்தது. இந்நிறுவனம் அதன் பயிற்சி நிறுவனத்தின் சக்தி வினைத்திறனை அதிகரிப்பதற்கான மற்றும் மீள்புதுபிக்கத்தக்க சக்திப் பிறப்பாக்கத்தினை மேம்படுத்துவதற்கான ஒரு பூரணமான அணுகுமுறையினை முன்மொழிந்திருந்தது. இந்த முன்மொழிவில் உயிரியில் வாயூ உருவாக்கத்திற்கான பிரிவொன்றும் PV – முறைமையின் பொருத்துகையூம் நகரக் கூட்டுப் பசளைத் தோட்டம் ஒன்றினை உருவாக்குவதும் உள்ளடக்கியிருந்தன.

ஆக்கத்திறன் மிகு சக்தித் தீர்வுகளைப் பரந்த அளவில் பெற்றுக்கொள்வதையூம் பங்குபற்றுனருக்கும் பசுமைச் சக்தி நிபுணர்களுக்கும் இடையில் பயன்மிக்க ஒத்துழைப்பினை ஏற்படுத்துவதையூம் போஷிக்கும் வகையிலேயே இந்தப் போட்டி வடிவமைக்கப்பட்டுள்ளது. முன்மொழிவுகளை எழுதும் செயலமர்வுகளின்போது பங்குபற்றுனர்கள் நீடுறுதியான சக்தித் தீர்வுகளின் திட்டமிடல் மற்றும் முகாமைத்துவம் பற்றிய அறிவினைப் பெற்றுக்கொண்டு வரப்போகின்ற பல தலைமுறைகளுக்கு நன்மை வழங்குவதற்காக இலங்கையின் சுற்றுச்; சூழலின் பசுமையான எதிர்காலத்திற்குப் பங்களிப்பு வழங்குவர்.

பொதுத் தகவல்

குறிக்கோள்

போட்டியானது சக்தி வினைத்திறனை முன்னேற்றுவதற்கான கருத்தியல்களை மேம்படுத்துவதனையூம் சமுதாயத்தில் வாழும் மக்களின் நாளாந்தத் தேவைகளுக்குச் சேவை வழங்குவதற்காக மீள்புதுப்பிக்கத்தக்க சக்தித் தீர்வுகளை மேம்படுத்துவதனையூம் நோக்காகக் கொண்டுள்ளது. இலங்கையில் ஒரு முன்மொழிவாக வரக்கூடிய ஒரு பசுமை சக்தித் தீர்வினை அமுல்படுத்துவது போட்டியிலிருந்து எதிர்பார்க்கப்படும் பலாபலனாகும். உத்தேசக் கருத்திட்டங்கள் பின்வரும் குறிக்கோள்களில் ஒன்றினை அல்லது இரண்டினையூம் கொண்டிருக்க வேண்டும்.

நோக்கெல்லை

உத்தேசக் கருத்திட்டங்கள் பின்வரும் குறிக்கோள்களில் ஒன்றினை அல்லது இரண்டினையூம் கொண்டிருக்க வேண்டும்.

சக்தி வினைத்திறனை மேம்படுத்துதல்:
சக்தியினைச் சேமித்தல் சக்தி வீணாவதைக் குறைத்தல் ஆகியவற்றுக்குப் பங்களிப்பு வழங்கும் எண்ணக்கருக்கள்.
உதாரணம் – LED அல்லது CFL மின்குமிழ்களைப் பயன்படுத்துதல்இ துவிச்சக்கர வண்டியில் செல்வதற்கு வசதியினை வழங்குகின்ற கிராமம்.

மீள்புதுப்பிக்கத்தக்க சக்திப் பயன்பாட்டினை மேம்படுத்துதல்:
மீள்புதுப்பிக்கத்தக்க சக்தியினால் வலுவுட்டப்படும் கைத்தொழில்கள் அல்லது செயன்முறைகள்.
உதாரணம் – சூரிய சக்தியில் இயங்கும் வீதி விளக்குகள்இ சேதனக் கழிவுகளிலிருந்து பெறப்படும் உயிரியல் வாயூ

விண்ணப்பம் செய்வதற்கான இறுதித் திகதி

சமர்ப்பணங்களை அனுப்பி வைப்பதற்கான இறுதித் திகதி 2019 ஏப்ரல் 30ஆம் திகதியாகும். விண்ணப்பங்களை இணையத்துக்கு ஊடாக அல்லது தபால் மூலம் அனுப்பி வைக்க முடியும் (அஞ்சல் அலுவலக முத்திரை நிர்ணயகரமானதாக இருந்து வரும்) இணையத்துக்கூடான விண்ணப்பப் படிவத்திற்கான இணைப்பு:

அஞ்சல் முகவரி:
Daniel Schreiber
GIZ Country Office Sri Lanka/Maldives
No. 6 Jawatta Avenue, Colombo 5

பூர்த்தி அடையாத முன்மொழிவுகள் மற்றும் உரிய திகதிக்கு பின்னர் கிடைக்கும் முன்மொழிவுகள் என்பன பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படமாட்டாது.

போட்டியை செயற்படுத்துதல்

கிடைக்கும் விண்ணப்பங்களிலிருந்து, ஒன்பது விண்ணப்பதாரிகள் சுருக்கப்பட்டியலில் உள்ளடக்கப்படுவர். தொழில் சார் சக்தி ஆலோசகர் ஒருவரின் வழிகாட்டுதலின் கீழ் தமது கருத்திட்ட முன்மொழிவுகளை மெருகூட்டிக் கொள்வதற்கும், அவற்றை நடுவர்களிடம் சமர்ப்பிப்பதற்கும் போட்டியாளர்களுக்கு ஒரு வாய்ப்பு வழங்கப்படும். சுருக்கப்பட்டியலிருந்து மிகச் சிறந்த யோசனை தெரிவு செய்யப்பட்டு, அதற்கு “இலங்கை பசுமை சக்தி சம்பியன்; 2019” ( Green Energy Champion Sri Lanka 2019) விருது வழங்கப்படும்.

தகைமை அளவுகோலை எட்டுதல் தெரிவிற்கு அல்லது நிதியளிப்பைப் பெற்றுக்கொள்வதற்கு உத்தரவாதமாக அமையாது.

வெற்றியீட்டியவர் தொடர்பான அறிவித்தல்

தெரிவுசெய்யப்பட்ட கருத்திட்டங்கள் நேரடியாகத் தொடர்புகொள்ளப்பட்டு இணையத்தளத்தின் செய்திப் பிரிவிலும் முகப்புத்தகத்திலும் அவை பகிரங்கமாக அறிவிக்கப்படும். ஒவ்வொரு வகைக்குமுரிய பசுமைச் சக்தி வெற்றியாளர் யார் என்பது போட்டியின் இறுதியில் பிரகடனப்படுத்தப்படும். வெற்றிபெற்ற கருத்திட்டங்களின் அமுல்படுத்தலின் பின்னர் இறுதியான விருது வழங்கும் நிகழ்வில் சகல எண்ணக்கருக்களும் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்படும்.

விருது

இறுதிச் சுற்றுக்குத் தெரிவுசெய்யப்படும் அனைவரும் சீர்படுத்தும் செயலமர்விற்கு அழைக்கப்பட்டு மீள்புதுப்பிக்கத்தக்க சக்தி தொடர்பான மேலதிக உள்ளீடுகளைக் கொண்டு நிபுணர்களின் வழிகாட்டலின் கீழ் அவர்களின் முன்மொழிவுகள் இறுதியாகச் சீராக்கப்படும்.

ஒவ்வொரு வகையிலிருந்தும் வெற்றிபெரும் எண்ணக்கரு தெரிவுசெய்யப்படும். சகல பசுமைச் சக்தி வெற்றியாளர்களும் 04 மில்லியன் இலங்கை ரூபா பெறுமதியான தொழில்நுட்பத்தினையும் பயிற்சியினையும் பெற்றுக்கொள்வர். இதன் மூலம் அவர்களின் கருத்திட்ட எண்ணக்கருக்களை அமுல்படுத்த முடியும் (கிட்டத்தட்ட 20000 யூரோக்கள்).

விண்ணப்ப வழிகாட்டிகள்

இலக்குக் குழு

பசுமைச் சக்தி வெற்றியாளர் இலங்கை போட்டியில் பங்குபற்றும் சகல பங்குபற்றுனர்களும் பின்வரும் 03 வகைகளுள் ஒன்றில் அடங்குவர்.

 • அரசாங்கத் துறை நிறுவனங்கள்
 • தனியார் துறை அமைப்புக்கள்
 • சிவில் சமூகம்இ அரச சார்பற்ற நிறுவனங்கள் (NGO)இ சமுதாய மட்ட நிறுவனங்கள் (CBO)

ஒவ்வொரு வகையிலிருந்தும் மிகவும் பயன்மிக்க முன்மொழிவுகளில் மிகச்சிறந்த 03 முன்மொழிவுகள் முன்னரே தெரிவுசெய்யப்பட்டு அவை பின்னர் சீராக்கப்படும் செயலமர்வுகளில் இறுதிப்படுத்தப்படும். ஒவ்வொரு வகையிலும் பசுமைச் சக்திப் பட்டம் வழங்கப்படும்.

நீங்கள் தனிநபராக அல்லது குழுவாக விண்ணப்பிக்கலாம். எவ்வாறாயினும் ஒரு நபர் ஒரு விண்ணப்பத்தினைச் சமர்ப்பிக்க மாத்திரமே அனுமதிக்கப்படுவார். முன்மொழிவுகள் சிங்களம், தமிழ் அல்லது ஆங்கிலம் மொழிகளில் சமர்பிக்கப்படலாம்.

அணுகுமுறை

உத்தேச கருத்திட்டத்தின் சாத்தியவளம் மற்றும் புத்தாக்கத்தன்மை ஆகியவற்றினைத் தெளிவாகக் குறிப்பிட்டு தற்போதுள்ள பிரச்சினையினைத் தீர்க்க உங்களின் எண்ணக்கரு பயன்மிக்கதாக இருக்கும் என்பதற்கான சான்றினைச் சமர்ப்பிக்கவும். நீங்கள் ஒன்றிற்கு மேற்பட்ட முன்மொழிவுகளைச் சமர்பிக்கலாம் அல்லது பல்வேறு எண்ணக்கருக்களைச் சமர்ப்பிப்பதற்குப் போட்டியாளர்களுடன் நீங்கள் அணிசேரலாம். இதைத் தவிர நீங்கள் தெரிவிற்கான தகைமைகளைப் பூர்த்தி செய்தால் ஏற்கனவேயுள்ள கருத்திட்டத்தை விஸ்தரிப்பதற்கும் விண்ணப்பிக்கலாம்.

முன்மொழிவுகளைச் சமர்பிப்பதற்கு முன்னர் அந்த முன்மொழிவுகளைத் திருத்தி அவற்றினைச் சிறந்த முறையில் தயாரிப்பதற்காக 09 மாகாணங்களிலும் ஜனதக்சானுடன் இணைந்து GIZ முன்மொழிவுகளை எழுதும் செயலமர்வுகளை வழங்குகின்றது. எழுதும் செயலமர்வானது கருத்திட்ட எண்ணக்கருக்களின் தரத்தினை மேம்படுத்துவற்காக வடிவமைக்கப்பட்டுள்ளதுடன் சகல பங்குபற்றுனர்களும் இதில் கலந்துகொள்ளுமாறு அழைக்கப்படுகின்றனர் (வருகை தருவது கட்டாயமல்ல).

ஒவ்வொரு வகையிலிருந்தும் தெரிவுசெய்யப்படுகின்ற மிகச்சிறந்த முன்மொழிவுகள் சீர் திருத்தும் செயலமர்வில் நிபுணர்களின் வழிகாட்டலின் கீழ் மீளாய்வு செய்யப்படும். ஜேர்மன் தூதரகம் மற்றும் இலங்கை சக்தி அதிகாரசபை ஆகியவற்றின் பிரதிநிதிகளும் வேறு நிபுணர்களும் அடங்கிய நடுவர் குழாமும் புஐணு; உம் ஒவ்வொரு வகையிலிருந்தும் சிறந்த முன்மொழிவுகளைத் தெரிவுசெய்யூம். வெற்றிபெறும் கருத்திட்ட எண்ணக்கரு முன்மொழிவுகளை அமுல்படுத்துவதற்காக நிதி மற்றும் தொழில்நுட்ப உதவிகளைப் பெற்றுக்கொள்ளும் மேலும் புத்தாக்கமிகு சக்தி முன்னோடி என்ற வகையில் நாடு முழுவதிலும் மேற்கொள்ளப்படக்கூடிய மேலதிக கருத்திட்டங்களுக்கான மாதிரியாகவும் செயல்படும்.

நிதிசார் வழிகாட்டுதல்

கருத்திட்டம் நிதி ரீதியாக சாத்தியமானதாக இருப்பதுடன் தற்போதைய வரவு செலவு வரையறைகளுக்குள் பொருந்தக்கூடியதாக இருத்தல் வேண்டும். மேலதிக வளங்கள் தேவைப்படுமாயின், கருத்திட்ட முன்மொழிவாளர்கள் ஏனைய பொது, தனியார் நிதிப்படுத்தல் மூலங்களுடன் கூட்டாக இணைந்து செயற்பட வேண்டுமென பரிந்துரை செய்யப்படுகின்றது. அத்தகைய நிதிப்படுத்தல் மூலங்கள் விண்ணப்பத்திற்கு முன்னர் கண்டறியப்பட வேண்டியிருப்பதுடன், அது தொடர்பான எழுத்து மூலமான உறுதிப்படுத்தல் விண்ணப்பத்துடன் இணைக்கப்படுதல் வேண்டும்.

தெரிவு அளவுகோல்

அளவுகோல் பட்டியல்

உங்களது முன்மொழிவுகள் பின்வருவனவற்றைக் கொண்டிருந்தால் புள்ளிகள் வழங்கப்படும்,

 1. 20%

  நிலையான சக்தித் தீர்வுகளுடன் இணைக்கப்பட்டிருத்தல்
  உங்களது முன்மொழிவு நீடுறுதியானதாகவும் சக்தித் தீர்விற்குப் பொருத்தமானதாகவும் இருக்கவேண்டும். இது சக்தி வினைத்திறனினை மேம்படுத்துவதன் மூலம் (சக்தியினைச் சேகரித்தல் அல்லது சக்தி வீணாகுவதைக் குறைத்தல்) பங்களிப்பு வழங்குவதனையூம் மீள்புதுப்பிக்கத்தக்க சக்திப் பயன்பாட்டினை மேம்படுத்துவதன் மூலம் (மீள்புதுப்பிக்கத்தக்க சக்தித் தீர்வுகளின் மூலம் கைத்தொழிலுக்கு மின்சக்தியினை வழங்குதல்) பங்களிப்பு வழங்குவதனையூம் குறிக்கின்றது. அணுகுமுறைகளில் இரண்டில் ஒன்றோ அல்லது இரண்டுமோ தெரிவு செய்யப்படலாம்.

 2. 15%

  தற்போதைய பிரச்சினை அல்லது சவாலினைத் தீர்த்து அவ்வாறான பிரச்சினைக்குத் தீர்வொன்றினை முன்மொழிதல்
  நீடுறுதியான சக்தித் தீர்வுகளைப் பயன்படுத்துவதன் மூலம் உங்களது முன்மொழிவானது தற்போதுள்ள சவால் அல்லது பிரச்சினைக்கு முன்னேற்றத்தினை அல்லது தீர்வினை உருவாக்குவதனை நோக்கமாகக் கொண்டிருக்கின்றது. உங்களது முன்மொழிவினால் தீர்க்கப்படுகின்ற பிரச்சினையானது அவ்வாறு தீர்க்கப்படுவதாகப் புலணுணரப்பட்டு அது குறிப்பிட்ட பிராந்திய மக்களினுள் நிகழ்வதாக இருக்க வேண்டும். அல்லது பரந்த விரிவாக்கத்துடன் தேசிய மட்டத்தில் இடம்பெறக்கூடியதாக இருக்கவேண்டும். உங்களது எண்ணக்கரு கணிசமான மாற்றத்தை அடைந்து நீங்கள் கையாளும் சவாலினை மேம்படுத்துவதற்கும் இட்டுச் செல்லவேண்டும். உங்களது கருத்திட்டத்தின் விரும்பப்படுகின்ற பலாபலன்களை தௌpவாகக் குறிப்பிட்டு நீங்கள் தீர்க்க விரும்புகின்ற சவாலில் அது எவ்வாறு தாக்கம் செலுத்துகின்றது மற்றும் அதன் முக்கியத்துவம் என்ன என்பதை நீங்கள் விவரிக்க வேண்டும்.

 3. 20%

  நிதி ரீதியாகச் சமாளிக்கக்கூடியதாக இருத்தல்
  பசுமைச் சக்தி வெற்றியாளர் போட்டியில் வெற்றிபெறுகின்ற எண்ணக்கருவின் வரவு செலவுத் திட்டம் 40 இலட்சம் இலங்கை ரூபாவிற்கு வரையறுக்கப்பட்டுள்ளது. எனவே உங்களது எண்ணக்கரு தொடர்பான சகல மதிப்பிடப்பட்ட செலவுகளின் விரிவான கணக்குகள் முன்மொழிவில் உள்ளடங்குவது கட்டாயமானதாகும். நீங்கள் மிகத் துல்லியமான தகவல்களை வழங்குவதுடன் ஏற்படக்கூடிய ஒவ்வொரு செலவு பற்றியூம் சிந்திக்கவேண்டும். உங்களுக்குச் சில செலவுகள் பற்றி நிச்சயமாகத் தெரிந்திருக்காவிட்டால் கருத்திட்டச் செலவுகளைக் குறைத்து மதிப்பிடாமல் மிகையாக மதிப்பிட வேண்டுமென்று நாம் உங்களுக்குப் பரிந்துரைக்கின்;றௌம். எனவே எதிர்பாராத செலவுகளை இதன் மூலம் ஈடுசெய்ய முடியூம்.
  பின்வருவன போன்ற பிரதான ஆக்கக்கூறுகளைக் கருத்தில் கொள்ளவும்:

  • பணியாளர் செலவு
  • மேலதிக சேவை ஒப்பந்தம்
  • தேவைப்படுகின்ற உபகரணங்கள்
  • சிறிய மேலதிக செலவுகள்
 4. 20%

  தொழில்நுட்ப ரீதியாகச் சாத்தியவளமிக்கதாக இருத்தல்
  உங்களது முன்மொழிவின் சாத்திய வளத்தினை மீளவும் பரிசீலியூங்கள். இதிலே குறிப்பிட்ட கால வரம்பினுள் முகாமைத்துவம் செய்யக்கூடிய கருத்திட்ட எண்ணக்கரு மற்றும் உங்கள் கருத்திட்டத்தின் தொழில்நுட்ப ரீதியான புரிதல் ஆகியவை உள்ளடங்குகின்றன. கால அளவு மற்றும் பணிகள் ஆகியவற்றின் சாத்தியமான ஒழுங்கில்; உங்களது முன்மொழிவின்; கருத்திட்டப் படிகளை எடுத்து விளக்குவதற்காக ஓர் அட்டவணையினைச் சேருங்கள். உங்களது கருத்திட்டத்தின் நீடுறுதியான மற்றும் நீண்டகாலப் பயன்பாட்டை உறுதிப்படுத்துவதற்கு உங்களது எண்ணக்கருவின் நீண்டகாலப் பயன்பாட்டினை உறுதிப்படுத்துவதற்கான அணுகுமுறையினைக் கருத்தில் கொள்ளுங்கள். எதிர்காலத்திற்காக ஒரு பராமரிப்புக் கட்டமைப்பினைச் சமர்பிப்பது பயன்மிக்கதாக அமையும்.

 5. 10%

  பிரச்சினையினால் பாதிக்கப்பட்டுள்ள சமூகம் உங்களின் முன்மொழிவை ஏற்றுக்கொள்ளல்
  உங்களது கருத்திட்ட எண்ணக்கருவானது சாதகமான பலாபலன்களைத் தருகின்ற கூடவே அதை அனுபவிக்கப்போகின்ற சுற்றியுள்ள நிறுவனங்கள் மற்றும் மக்களினால் ஏற்றுக்கொள்ளப்படுவது முக்கியமானது என்பதை மனதில் கொள்ளவும். பாதிக்கப்பட்டுள்ள மக்கள் மற்றும் சுற்றுச் சூழலுடன் உங்களது முன்மொழிவு பொருந்த வேண்டும். இது உங்களது முன்மொழிவின் எளிமையான விநியோகம் மற்றும் பயன்பாட்டினைப் போஷிப்பதுடன் செயற்திறன்மிக்க நீண்டகாலத் தீர்வினையும் உத்தரவாதப்படுத்துகின்றது.

 6. 15%

  நிலையான தாக்கத்தினைப் பேணி நீண்டகாலத் தீர்வினை எடுத்து விளக்குகின்றது
  உங்களது முன்மொழிவின் நீடுறுதியான அணுகுமுறை முக்கியமானதாகும். இது விரும்பத்தக்க மீள்புதுப்பிக்கத்தக்க பயன்பாட்டினையும் தாழ்வான மற்றும் மிகச் சிறப்பாகக் குறிப்பிடுவதாயின் பூச்சிய அளவிலான காபனீரொட்சைட் வெளியேற்றம் மற்றும் ஆகக்குறைந்த அளவிலான மாசாக்கம் மற்றும் மீள்சுழற்சிப் பொருட்களைப் பயன்படுத்துதல் ஆகியவற்றைக் குறிப்பிடுகின்றது. இதைத் தவிர மேலதிகமாகப் பிரச்சினையினை உருவாக்காமல் உங்களது எண்ணக்கரு இருக்கின்ற பிரச்சினைக்கு நீண்டகாலத் தீர்வுகளை வழங்கவேண்டுமென விரும்புகின்றது. தீர்வுகளின் நீடித்த நிலையான தன்மையானது நிலையான அணுகுமுறையின் பிரதான ஆக்கக்கூறினை எடுத்து விளக்குகின்றது.

நடுவர் குழாம்

இறுதிச் சுற்றுக்குத் தெரிவுசெய்யும் செயன்முறையானது கருத்திட்ட அணியினால் மேற்கொள்ளப்படுவதுடன் அது தெரிவுமுறைமையின் அடிப்படையில் மேற்கொள்ளப்படுகின்றது. இதற்கமைய ஒவ்வொரு முன்மொழிவும் தனித்தனியாக மதிப்பிடப்படும்.

போட்டியின்; நடுவர்கள் ஒவ்வொரு வகைக்காகவும் பசுமைச் சக்திச் சம்பியனைத் தெரிவுசெய்வர். இந்த நடுவர்களுள் GIZ இனதும் இலங்கை நிலையான சக்தி அதிகார சபையினதும் கொழும்பில் உள்ள ஜெர்மனிய தூதரகத்தினதும் பிரதிநிதிகள்; உள்ளடங்குவர்.