எம்மைப் பற்றி

GIZ திட்டம் சமஷ்டி வெளிநாட்டு அலுவலகத்தின் சார்பில் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் தொடர்பாடல்களுக்கு ஊடாக குறிப்பிடத்தக்க விதத்தில் சக்தி வினைத்திறனை விருத்தி செய்வதற்கு இலங்கையின் மின்வலு மற்றும் புதுப்பிக்கதக்க சக்தி அமைச்சுக்கு ஆதரவளித்து வருகின்றது.

ஆக்கக்கூறு 1

ஊடகப் பிரச்சாரம்

சமஷ்டி வெளிநாட்டு அலுவலகத்தின் சக்தி தொடர்பான வெளிநாட்டுக் கொள்கையின் இலக்குகளுக்கு இணங்கும் விதத்தில், இலங்கையில் முன்னெடுக்கப்படும் ஊடகப் பிரச்சாரத்தின் போது சக்தியின் வினைத்திறன் மற்றும் புதுப்பிக்கதக்க சக்தி வளங்களின் பாவனை என்பன மேம்படுத்தப்படும்.

இந்தப் பிரச்சார இயக்கம் நாளாந்த வாழ்க்கையில் சக்தியின் வினைத்திறன் மிக்க பாவனைக்கென இலகுவில் பின்பற்றக்கூடிய நடைமுறை வழிகாட்டுதல்களை தனிப்பட்ட குடும்பங்களுக்கு வழங்கும் பொருட்டு பாரம்பரிய ஊடகங்களையும் சமூக ஊடகங்களையும் இணைக்கின்றது. ஜேர்மனியின் புதுப்பிக்கத்தக்க சக்தி வளங்கள் தொடர்பான நடைமுறை உதாரணங்கள் தற்போது இருந்தும் வரும் தொழில்நுட்பங்களுக்கு உணர்வூட்டுவதுடன், ஜேர்மன் சக்தி நிலைமாற்றம் தொடர்பான ஒரு சித்திரத்தையும் முன்வைக்கின்றது. பச்சை வீட்டு வாயு வெளியேற்றங்கள் மற்றும் வளி மாசாக்கிகள் என்பவற்றை குறைப்பதற்கான ஒரு மையக் கூறாக புதுப்பிக்கத்தக்க சக்தி வகைகளின் வகிபங்கு புரிந்து கொள்ளக்கூடிய விதத்தில் முன்வைக்கப்படுகின்றது.

இந்தப் பிரச்சார இயக்கம் பின்வரும் மொடியுல்களை கொண்டுள்ளது: (i) சமூக ஊடகங்கள் (விசேடமாக முக நூல்), (ii)அனிமேஷன் வீடியோக்கள் மூலம் கதை சொல்லுதல், (iii) 2019 ஆம் வருடத்தில் வெற்றியீட்டிய கருத்தை பரப்புவதற்கான வாகனப்பவனிக் காட்சிப்படுத்தல்கள் மற்றும் (iv) ஏனைய முன்னெடுப்புகளுடனான ஒத்துழைப்பு.

ஆக்கக்கூறு 2

இலங்கையில் தலைசிறந்த சக்தி நிலைமைய மேம்படுத்துதல்

ஊடகப் பிரச்சாரத்தின் மூலம் முன்வைக்கப்படும் செய்திகளை அடிப்படையாகக் கொண்டு சக்தி வினைத்திறன் மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி வகைகள் என்பன குறித்த கருத்துக்களை சமர்ப்பிக்குமாறும் நாடளாவிய ரீதியில் நடாத்தப்படும் இரண்டாவது சுற்றுப் போட்டியில் பங்குபற்றுமாறும் சமூகங்கள், சிவில் சமூகம், தனியார் துறை மற்றும் பாடசாலைகள் ஆகிய தரப்புக்களிடம் வேண்டுகோள் விடுக்கப்படும்.

ஒன்பது மிகச்சிறந்த விண்ணப்பங்களை சமர்ப்பித்திருப்பவர்கள் ஒரு சுருக்கப்பட்டியல் நடைமுறையின் மூலம் இனங்காணப்படுவதுடன், ஒரு செயலமர்வில் பங்கேற்பதற்கெனவும் அழைக்கப்படுவர். இச்செயலமர்வின் போது தொழில்சார் வழிகாட்டுதலின் கீழ் வலையமைப்புக்களை உருவாக்கிக் கொள்வதற்கும், தமது கருத்திட்ட முன்மொழிவுகளை மேலும் மெருகூட்டிக்கொள்வதற்கும் அவர்களுக்கு வாய்ப்புக் கிடைக்கும். மேலும், சென்ற வருட வெற்றியீட்டிய அணியுடனான ஒரு கருத்துப் பரிமாற்றத்தை நடத்துவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.