பசுமை வலு முதன்மையாளன் தி்ட்டமானது வலு – செயல்திறன் மற்றும் கவனத்துடன் கூடிய வலு நுகர்வினை மேம்படுத்தும் செயற்பணியை மேற்கொள்கின்றது.

2016 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டு தற்போது நான்காம் கட்டத்திலுள்ள, அதன் நோக்கமானது இலங்கையில் பொதுமக்கள் விழிப்புணர்வினை ஏற்படுத்துவதனையும் பசுமை வலு தொலைநோக்குப் பார்வையாளர்களை வலுப்படுத்துவதையும் நோக்காகக் கொண்டுள்ளது.

2021 ஆம் ஆண்டிற்கான பசுமை வலு முதன்மையாளன் ஊக்குவிப்புத் திட்டம்

2021 ஆம் ஆண்டிற்கான பசுமை வலு முதன்மையாளன் ஊக்குவிப்புத் திட்டமானதுவணிக வளர்ச்சியை “விரைவுபடுத்துவதை” நோக்கமாகக் கொண்ட தீவிரமானவிரைவான மற்றும் அதிவேக பயிற்சியுடன் மேம்பட்ட ஊக்குவிப்புத் திட்டத்தை வழங்குகிறது. மக்களுக்கும் உலகிற்கும் ஒரு சிறந்த எதிர்காலத்தை உருவாக்க அவர்களின் பணியை இயக்குவதில் தொடக்க மற்றும் தொழில்முனைவோருக்கு ஆதரவளிப்பதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது. 

குட் லைஃப் எக்ஸ் (Good Life X) இன் ஒத்துழைப்புடன் ஹட்ச் வேர்க்ஸ் (Hatch Works) ஆகியவற்றால் செயல்படுத்தப்படும்தேர்ந்தெடுக்கப்பட்ட பங்கேற்பாளர்கள் தொழில் வல்லுநர்களால் வழிநடத்தப்படுவதுடன் அவர்களின் யோசனைகளை சந்தைக்குத் தயாராக்குவதற்கு துணை வளங்கள் மற்றும் உள்கட்டமைப்பினை  அணுகுவதற்கான வாய்ப்பு வழங்கப்படும்.