பசுமை வலு முதன்மையாளன்

பசுமை வலு முதன்மையாளன் தி்ட்டமானது வலு – செயல்திறன் மற்றும் கவனத்துடன் கூடிய வலு நுகர்வினை மேம்படுத்தும் செயற்பணியை மேற்கொள்கின்றது. 2016 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டு தற்போது நான்காம் கட்டத்திலுள்ள, அதன் நோக்கமானது இலங்கையில் பொதுமக்கள் விழிப்புணர்வினை ஏற்படுத்துவதனையும் பசுமை வலு தொலைநோக்குப் பார்வையாளர்களை வலுப்படுத்துவதையும் நோக்காகக் கொண்டுள்ளது.

ஜேர்மன் மத்திய வெளியுறவு அலுவலகம் சார்பாக Deutsche Gesellschaft für Internationale Zusammenarbeit (GIZ) GmbH ஆனது இலங்கையில் வலுச் செயல்திறனை மேம்படுத்துவதற்காக மின் சக்தி அமைச்சு, சூரிய சக்தி, காற்று மற்றும் நீர் மின்னுற்பத்தி கருத்திட்ட இராஜாங்க அமைச்சு ஆகியவற்றிற்கு உதவுகின்றது.

குட் லைஃப் எக்ஸ் (Good Life X) இன் ஒத்துழைப்புடன் ஹட்ச் வேர்க்ஸ் (Hatch Works) செயல்படுத்திய பசுமை வலு முதன்மையாளன் ஊக்குவிப்புத் தி்ட்டமானது 2021 இந்த திட்டத்தின் இன்றியமையாததொரு பகுதியாகும், இது வலுச் செயல்திறனுள்ள திட்டங்களை செயல்படுத்த தீவிரமாக முயற்சிக்கும் வணிகங்களை அடையாளம் காண்பதற்கும் அவர்களுக்கு பயிற்சிக்கான வளங்களை வழங்குவதற்கும் புதிய தயாரிப்புகளின் அபிவிருத்தி மற்றும் வளர்ச்சியை இயக்குவதற்குமானதொரு பயணமாகும் 2021 ஆம் ஆண்டிற்கான பசுமை வலு முதன்மையாளன் ஊக்குவிப்புத் தி்ட்டமானது, பங்கேற்பாளர்களுக்கு உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் தங்கள் வியாபாரக்குறி தெரிநிலையை மேம்படுத்தும் அதேவேளை, உலகளாவிய சந்தைகளை அடைவதற்கான வாய்ப்பை வழங்குகிறது. இந்த திட்டத்தை ஜேர்மன் கைத்தொழில் மற்றும் வர்த்தக தூதுக்குழுவினர் மற்றும் இலங்கை நிலைபெறுதகு வலு அதிகாரசபை ஆகியோர் ஆதரிக்கின்றனர்.

2021 ஆம் ஆண்டிற்கான பசுமை வலு முதன்மையாளன் ஊக்குவிப்புத் தி்ட்டமானது ஊக்குவிப்புத் தி்ட்டம் பற்றிய மேலதிக தகவல்களுக்குத் தயவுசெய்து இங்கு கிளிக் செய்யவும்.