இலங்கையின் சக்தி வளங்கள் தொடர்பான விவரம்

நடுத்தர காலத்தில், முதன்மையான சக்தி மூலங்கள் என்ற முறையில் எண்ணெய் மற்றும் நிலக்கரி என்பற்றில் தங்கியிருக்கும் நிலையை குறைத்துக் கொள்வதற்கு இலங்கை திட்டமிடுகின்றது. தற்பொழுது கனிய எண்ணெய் சக்தி வளங்கள் நாட்டின் சக்தி தேவைகளில் சுமார் 60 சதவீதத்தை நிறைவேற்றுகின்றன. இது கணிசமான அளவிலான சுற்றாடல் தாக்கத்தை ஏற்படுத்துவது மட்டுமன்றி, சக்தி நுகர்வு துரிதமான அதிகரித்து வரும் நிலையில் அதிகரித்தளவிலான வெளிநாட்டுச் செலாவணி வெளிப்பாய்ச்சல்களையும் தூண்டுகின்றது. அதன் பின்விளைவாக அரசாங்கம் ஏனைய மின் வலு உருவாக்க வழிமுறைகளை கண்டறிந்து வருகின்றது.

சூரிய சக்தி, உயிரணுத்திணிவு மற்றும் காற்று சக்தி என்பவற்றை பயன்படுத்திக் கொள்ளக்கூடிய மிகச் சிறந்த நிலையில் இலங்கை இருந்து வருகின்றது. அது இப்பொழுது அதன் நீர் வலு கொள்திறன்களை முழுமையாக பயன்படுத்திக் கொண்டுள்ளது. அதற்கு மாறான விதத்தில், சக்தி செயல்திறனை விருத்தி செய்து கொள்வது நாடு சக்தி இறக்குமதிகளில் தங்கியிருக்கும் நிலையையும் காபனீரொட்சைட் வாயு வெளியேற்றங்களையும் குறைக்கின்றது.

இலங்கையின் சக்தி தொடர்பான இலக்குகள்

இலங்கையை 2030 ஆம் ஆண்டிற்குள் சக்தியில் சுயதேவையை பூர்த்தி செய்து கொள்ளும் ஒரு நாடாக ஆக்குதல்.

பாதுகாத்தல் மற்றும் வினைத்திறன் மிக்க பாவனை என்பவற்றுக்கு ஊடாக வருடாந்த சக்தி தேவை வளர்ச்சியை 2 சதவீதத்தின் மூலம் குறைத்தல்

புதுப்பிக்கத்தக்க சக்தி வளங்களிலிருந்து உற்பத்தி செய்யப்படும் மின்வலுவின் பங்கினை 2014 ஆண்டில் 50% இலிருந்து 2020 ஆண்டில் 60 %ஆக அதிகரித்தல்; இறுதியாக 2030 ஆம் ஆண்டளவில் மொத்த கேள்வியையும் புதுப்பிக்கத்தக்க சக்தி வளங்கள் மற்றும் ஏனைய சுதேச சக்தி என்பவற்றின் மூலம் நிறைவுசெய்து வைத்தல்

சக்தித் துறையின் கார்பன் அளவினை 2025 ஆம் ஆண்டளவில் 5 சதவீதமாகக் குறைத்தல்

இலங்கையின் சக்தித் துறை தொடர்பான மேலும் தகவல்களை பெற்றுக் கொள்வதற்கு பார்க்கவும்: ENERGY EMPOWERED NATION 2015-2025.