பசுமை வலு முதன்மையாளன் 2017

பசுமை வலு முதன்மையாளன் தி்ட்டம் 2017 யூன் மாதத்தில் தொடங்கப்பட்டது, இது ஏழு வார பங்கேற்பு காலத்தைத் தொடங்கியது. இதற்கு தனியார் வீடுகள், நகராட்சிகள், பல்கலைக்கழகங்கள், பொது அதிகாரசபைகள் மற்றும் சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களிலிருந்து மொத்தம் 80 விண்ணப்பங்கள் நாடு முழுவதிலும் இருந்து பெறப்பட்டன.

ஒரு பொறியியல் ஆலோசனை நிறுவனத்தின் முழுமையான பகுப்பாய்வு மற்றும் விண்ணப்பங்களை ஆராய்ந்ததைத் தொடர்ந்து, 10 சிறந்த விண்ணப்பதாரர்களை மேலும் மதிப்பீடு செய்ய கள வருகைகள் ஏற்பாடு செய்யப்பட்டன. பத்து வேட்பாளர்களில் ஐந்து பேர் பின்னர் பட்டியலிடப்பட்டு, இரண்டு நாள் ‘மெருகேற்றும் செயலமர்விற்கு’ அழைக்கப்பட்டனர், அங்கு அவர்கள் தொழில்முறை வழிகாட்டுதலின் கீழ் தங்கள் திட்ட யோசனைகளைத் திருத்த முடிந்தது.

\திட்ட முகாமைத்துவம், திட்டத்தின் தொழில்நுட்ப மற்றும் நிதி சாத்தியவளம், சமர்ப்பித்தல் திறன்கள் மற்றும் பொறியியல் குழுவின் ஆதரவுடன் திட்ட யோசனையை திருத்துவதற்கான ஆலோசனை போன்ற முக்கியமான கூறுகள் குறித்து இந்த செயலமர்வு விரிவாகக் கூறியது.

வெற்றிகரமான செயலமர்வினைத் தொடர்ந்து, முன்னாள் இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான ஜெர்மன் தூதுவர் ஜார்ன் ரோட், மின்சாரம் மற்றும் புதுப்பிக்கத்தக்க வலு அமைச்சின் முன்னாள் மேலதிகச் செயலாளர் டீ. டீ. அமரதுங்க, இலங்கை வலுச்சக்தி முகாமையாளர்கள் சங்கத்தின் (SLEMA) பிரதிநிதியொருவர் மற்றும் இலங்கை GIZ இன் பிரதிநிதிகள் ஆகியோரைக் கொண்ட நடுவர் குழாத்திடம் வேட்பாளர்கள் தமது பெறுபேறுகளைச் சமர்ப்பிக்குமாறு அழைக்கப்பட்டனர்.

10 மில்லியன் ரூபா (58,000 யூரோ) மதிப்புள்ள நிறுவல்கள் மற்றும் உபகரணங்களைப் பெற்று இலங்கை அபிவிருத்தி நிருவாக நிறுவகம் (SLIDA) பசுமை வலு முதன்மையாளன் தி்ட்டம் 2017 இன் வெற்றியாளராக உருவெடுத்தது. இரண்டாவது இடத்தில், 2.5 மில்லியன் ரூபா (14,000 யூரோ) வழங்கப்பட்ட விஞ்ஞான, தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி அமைச்சு மற்றும் மட்டக்களப்பு நகராட்சி மன்றத்தின் ஒத்துழைப்புடன் தியகல போய்ஸ் டவுன் ஆகியன இருந்தன. மூன்றாம் இடத்தை வென்றவர்களுக்கு 1.5 மில்லியன் ரூபா (9,000 யூரோ) பரிசு கிடைத்தது.