புதுப்பிக்கத்தக்க சக்தி

சக்தி என்பது வேலை செய்வதற்கான கொள்திறனைக் கொண்டிருக்கும் ஒரு முறைமை ஆகும். மறுபுறத்தில் குறிப்பிட்ட சக்தி அளவு என்று குறிப்பிடும் பொழுது, அது காரியங்களை நிகழச்செய்வதற்கான கொள்திறனையே காட்டுகின்றது. அந்த முறைமை சமுத்திரங்களுக்கு ஊடாக நூற்றுக்கணக்கான பயணிகளை எடுத்துச்செல்லும் ஒரு ஜெட் விமானமாக, எலும்பு செல்கள் வளரும் ஒரு மனித உடலாக அல்லது காற்றில் எழுந்து செல்லும் ஒரு பட்டமாக இருக்க முடியும். நகர்த்துவதில் அல்லது வளரச் செய்வதில் இந்த ஒவ்வொரு முறைமையும் வேலை செய்வதுடன், சக்தியையும் பயன்படுத்திக் கொள்கின்றது. ஒன்றில் அதனை உருவாக்கிக் கொள்ளவோ அல்லது அழிக்கவோ முடியாது, ஆனால், ஒருவகையிலிருந்து மற்றொருவகைக்கு அதனை மாற்றியமைக்க மாத்திரமே முடியும்.

சூரிய ஒளி, காற்று, அலைகள், பேரலைகள் மற்றும் புவி அனல் சூடு போன்ற மானிட கால அளவின் அடிப்படையில் இயல்பாகவே மீளாக்கப்படும் வளங்களினால் உருவாக்கப்படும் சக்தி புதுப்பிக்கத்தக்க சக்தி என அழைக்கப்படுகின்றது. அது பல்வேறு வடிவங்களில் இருக்க முடியும். உதாரணமாக சூரியனிலிருந்து நேரடியாக அதனைப் பெற்றுக்கொள்ள முடியும்; அல்லது பூமியின் அடியாழத்தில் உருவாக்கப்படும் வெப்பத்திலிருந்து பெறமுடியும்.

www.iea.org என்னும் தளத்தில் புதுப்பிக்கத்தக்க சக்திகள் பற்றி மேலும் அறிந்து கொள்க.

புதுப்பிக்கத்தக்க சக்தி வகைகளில் மிகவும் பிரபல்யமான ஒரு வகை சூரிய சக்தியாகும். சூரியனிலிருந்து அதிகளவிலான சக்தி பூமியின் மீது ஒரு மணித்தியாலயத்தின் போது விழுகின்றது. அதாவது உலகில் வாழும் அனைத்து மக்களும் ஒரு வருடத்தில் பயன்படுத்திக்கொள்ளும் சக்தியிலும் பார்க்க அதிக சக்தி இவ்விதம் ஒரு மணித்தியாலயத்தில் பூமிக்கு வருகின்றது. அது ஒரு வலுவான சக்தி மூலமாக இருந்து வருவதுடன், வீடுகளையும், வியாபார நிலையங்களையும் சூடாக்குவதற்கும், குளிரூட்டுவதற்கும், வெளிச்சமூட்டுவதற்கும் அதனை பயன்படுத்திக் கொள்ளமுடியும். சூரிய ஒளியை கட்டடங்களில் பயன்படுத்திக் கொள்ளக்கூடிய ஒரு சக்தியாக மாற்றியமைக்கக்கூடிய பல்வேறுபட்ட தொழில்நுட்பங்கள் இருந்து வருகின்றன. பெருமளவுக்கு பொதுவாக பயன்படுத்தப்படும் சூரிய ஒளித் தொழில்நுட்பங்கள் சூரிய ஒளி மூலம் தண்ணீரை சூடாக்குதல் மற்றும் மின்சார உருவாக்கத்திற்கென சூரியக் கதிரை பயன்படுத்திக் கொள்ளல் என்பனவாகும்.

நீர் வலு அபிவிருத்தியடைந்த, வளர்ந்து வரும், அபிவிருத்தியடைந்து வரும் 150 இற்கு மேற்பட்ட நாடுகளில் உற்பத்தி செய்யப்பட்டு வரும் ஒரு துறையாகும். அது ஆறுகளிலிருந்து அல்லது மனிதர்களினால் உருவாக்கப்பட்ட கட்டமைப்புக்களில் இருந்து ஓடிவரும் நீரின் மூலம் இயக்கப்படும் சுழல் இயந்திரங்களிலிருந்து சக்தியைப் பெற்றுக்கொள்கின்றது. நீர் காற்றிலும் பார்க்க எண்ணூறு மடங்கு உயர் அடர்த்தியைக் கொண்டிருக்கும் காரணத்தால் மெதுவாக ஓடும் ஒரு சிறிய நீரோடை அல்லது நடுத்தர அளவிலான ஒரு கடல் கூட கணிசமான அளவிலான சக்தியை உருவாக்கமுடியும். உலகின் மொத்த மின்வலுத் தேவையில் 16% தற்பொழுது நீர் வலுவின் மூலம் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றது.

புவி அனல் சக்தி என்பது பூமியில் உருவாக்கப்பட்டு, சேகரித்து வைக்கப்பட்டிருக்கும் அனல் சக்தியாகும். அந்த வெப்பத்தை பூமியின் அடியாழத்தில் அமைந்திருக்கும் சுடு நீரிலிருந்து அல்லது நீராவி நீர்த்தேக்கங்களிலிருந்து பெற்றுக்கொள்ள முடியும். மேலும், அது கட்டடங்களுக்குள்ளே சூடாக்குதல் மற்றும் குளிரூட்டுதல் செயன்முறைகளுக்கான பெருமளவுக்கு சக்தி வினைத்திறன் கொண்ட புதுப்பிக்கத்தக்க தொழில்நுட்பம் ஒன்றாக இருந்து வருகின்றது. மாறுபடும் பருவ கால அடிப்படையில், புவி அனல் பம்ப் மற்றும் பரிமாற்றக் கருவி (Geothermal Heat Pump and Heat Exchanger ) என்பவற்றின் உதவியுடன் புவி அனல் சக்தி பூமிக்குள்ளேயும்(குளிரூட்டுவதற்காக) பூமிக்கு வெளியேயும் (சூடேற்றுவதற்காக) நகர்த்தப்படுகின்றது.

மற்றொரு பிரபல்யமான புதுப்பிக்கத்தக்க சக்தி வகை காற்று சக்தியாகும். காற்றின் மூலம் இயங்கும் சுழல் இயந்திரங்களை இயக்குவதற்கும், சக்தியை உருவாக்குவதற்கும் காற்றோட்டங்களை பயன்படுத்திக் கொள்ள முடியும். கரைக்கு அப்பாற்பட்ட பிரதேசங்கள் மற்றும் கடல் மட்டத்திலிருந்து பெருமளவுக்கு உயர்வான இடங்களில் அமைந்திருக்கும் பிரதேசங்கள் போன்ற வலுவான விதத்தில் அடிக்கடி காற்று வீசும் பிரதேசங்கள் காற்றாலைகளுக்கான விரும்பத்தக்க அமைவிடங்களாகும்.

உயிரணுத்திணிவு (Biomass) என்பது உயிருள்ள பொருள்களிலிருந்து அல்லது சேதன சமயலறைக் கழிவுப் பொருட்கள், தாவர அல்லது விலங்குப் பொருட்கள் போன்ற உயிர் அங்கங்களிலிருந்து அண்மையில் பெறப்பட்ட உயிரியல் பொருட்களாகும். சக்தி வளம் என்ற முறையில் உயிரணுத்திணிவை வெப்பத்தை உற்பத்தி செய்து கொள்வதற்காக நேரடியாக பயன்படுத்திக் கொள்ள முடியும்; அதனை பல்வேறு வடிவங்களிலான உயிர் எரிபொருள்களாக மாற்றியமைத்த பின்னர் மறைமுகமாக பயன்படுத்திக் கொள்ளவும் முடியும்.